ஹிஜாப் தடை வழக்கு: வரும் 7-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Update: 2022-09-05 12:18 GMT

புதுடெல்லி,

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடையை கர்நாடக ஐகோர்ட்டு உறுதிசெய்தது. கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று வந்த நிலையில், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 29 அன்று, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சீருடை விதிகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடும் கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பல்வேறு மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்