ராகுல் காந்திக்கு விமானம் மூலம் கர்நாடக காங்கிரஸ் மாணவர் அமைப்பு வித்தியாசமான முறையில் வரவேற்பு
காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில் ராகுல் காந்திக்கு விமானம் மூலம் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்திற்கு ராகுல் காந்தி சென்றுள்ளார்.
அங்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்திக்கு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சாலையெங்கும் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அமைத்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அக்கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில், சிறிய ரக தனியார் விமானம் மூலம் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமான வாசகங்களை கொடி போல கட்டி வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.