சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு..!

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசினார்.

Update: 2023-05-26 06:49 GMT

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இதுதவிர 8 மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர். இதுவரை எந்த மந்திரிகளுக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு சோனியா காந்தியை சித்தராமையா சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

அமைச்சர்கள் பதவிக்கு 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் பெயர் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு புதிய அமைச்சர்கள் பட்டியல் குறித்த இறுதி அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்றும் நாளை பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரிசபை விரிவாக்கம் காரணமாக கர்நாடக அரசியல் தற்போது டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது. பெரும்பாலான தலைவர்கள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். அதே நேரத்தில் யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பாக இருந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்