2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.

Update: 2023-02-19 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பட்ஜெட்

கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் நடைபெற்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடா்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். ரூ.3.09 லட்சம் கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கர்நாடக சட்டசபைக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வழக்கமான விடுமுறை விடப்பட்டது.

அரசுக்கு நெருக்கடி

அந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்று முதல் பட்ஜெட் மீது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 24-ந் தேதி அந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபையின் கடைசி கூட்டம் நிறைவடைகிறது. அதன் பிறகு கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு 16-வது சட்டசபையின் கூட்டம் வருகிற மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்