கன்னட நடிகர் நிதின் கோபி திடீர் மரணம்

கன்னட நடிகர் நிதின் கோபி திடீர் மரணம் அடைந்தார்.

Update: 2023-06-04 21:25 GMT

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி. இவருக்கு வயது 39. இவர் பெங்களூரு பனசங்கரி இட்டமடுவில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நிதினை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பே நிதின் சுயநினைவை இழந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது நிதின் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இவர் கன்னடத்தில் 'ஹலோ டாடி', 'கேரளிடா கேசரி', 'முத்தினந்த பெண்', 'நிஷப்தா', 'சிரபாந்தவ்யா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மறைந்த பிரபல நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த 'சாஹச சிம்ஹா' படத்தில் நிதின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் கன்னடம் மற்றும் தமிழ் சின்னத்திரை தொடர்களிலும் நிதின் நடித்துள்ளார்.

நிதினின் மறைவுக்கு கன்னட திரைஉலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்