சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வு

சுப்ரீம் கோர்ட்டு 2-வது மூத்த நீதிபதியான ஏ.எம்.கான்வில்கர், (65 வயது) ஓய்வு பெற்றார்.

Update: 2022-07-29 19:15 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், ஆதார் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்த அமர்வில் இடம் பெற்றிருந்தவர் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டு என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியவர்.'குஜராத் கலவரத்தில் அப்போது முதல்-மந்திரியாக இருந்த மோடி மற்றும் 63 பேருக்கு தொடர்பு இல்லை' என, சிறப்பு புலானாய்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தவர்.

கடந்த 1957 ஜூலை 30ம் தேதி மஹாராஷ்டிராவின் புனேவில் பிறந்த கன்வில்கர், மும்பையில் சட்டம் பயின்று, 1982ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.பின் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார்; 2016 மே 13ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்று கான்வில்கர் ஓய்வு பெற்றார்.

இதை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று, கன்வில்கருடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்தனர்.

கொரோனா காரணமாக, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, கான்வில்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்