நீதிபதி மர்ம மரணம்; வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
நீதிபதியின் உடலில் காயங்கள் உள்ளதால் இது கொலையாக இருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா,
ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் சுபாஷ் குமார் பிஹரி (வயது 49). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், சுபாஷின் மனைவி நேற்று வீட்டை விட்டுவெளியே சென்றுள்ளார். பின்னர், அவர் மாலை வீட்டிற்கு வந்தபோது தனது கணவர் சுபாஷ் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுபாஷின் மனைவி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.