கர்நாடகத்தில் லாரி மீது ஜீப் மோதி விபத்து - 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
துமகுரு மாவட்டம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் ஒன்று வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.