நமது அம்மாவில் மருது அழகுராஜ் முறைகேடு - ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

நமது அம்மாவில் மருது அழகுராஜ் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-07-05 05:39 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் மருது அழகுராஜ். பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி பேசியதால் தொண்டர்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டு மருது அழகுராஜ் கூலிக்கு வேலை செய்து வருகிறார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ் ஈடுபடுவது சரியல்ல.

கொடநாடு சம்பவம் குறித்து மருது அழகுராஜ் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்.எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து செயல்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் அவர்களை திமுகவினர் தான் ஜாமீனில் எடுத்ததாக புகார் எழுந்தது. டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் என்றார்.

மேலும் ஆளாளுக்கு பிரச்சார வாகனத்த எடுத்துட்டு கிளம்பிடுறாங்க.. இன்றைக்கு டீசல் விற்கிற விலைல இதெல்லா தேவதானா..?" வேஸ்ட் ஆப் மணி, வேஸ்ட் ஆப் டைம், வேஸ்ட் ஆப் எனர்ஜி, வேஸ்ட் ஆப் டீசல்

அதிமுக தலைமை அலுவலகத்திர்கு சசிகலா வருவதற்கு உரிமை இல்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்