கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவதற்காக பா.ஜனதா தேசிய குழு பெங்களூரு வருகை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவதற்காக பெங்களூருவுக்கு, பா.ஜனதா தேசிய குழு பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளது.

Update: 2022-12-10 18:45 GMT

பெங்களூரு:

எந்த நேரத்திலும் தேர்தல்

குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா கட்சி தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றியால், அந்த கட்சியின் தலைவர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இதையடுத்து, கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கும் பா.ஜனதா தலைவர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜனதா தேசிய குழு வருகை

இந்த நிலையில், கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பா.ஜனதா தேசிய குழுவினர் பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளனர். அந்த குழுவினர் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதற்கட்டமாக ஆலோசித்திருப்பதாக தெரிகிறது.

மேலும் எந்தெந்த மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், பூத் மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த குழுவினர் ஆலோசித்திருப்பதாக கூறப்படுறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் எப்படி பிரசாரம் செய்ய வேண்டும், மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள், திட்டங்களை கொண்டு வருவது குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன், பா.ஜனதா தேசிய குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்