மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) போராட்டம்

கொப்பா டவுனில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-09 19:00 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுன் பகுதியைச் சேர்ந்த ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில செயலாளர் சுதர்சன் ஷெட்டி தலைமையில், கட்சி தொண்டர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்றுமுன்தினம் கொப்பா தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுதர்சன் ஷெட்டி பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் எந்த ஒரு நலத்திட்டங்களும் அறிவிக்காமல் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. மேலும் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவித்த நலத்திட்ட உதவிகளை கூட செய்யாமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தார் ராஜசேகரிடம் அவர்கள் கொடுத்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்