பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் குறிப்பிட்ட ஜனதா தளம் (எஸ்) கவுன்சிலர் தகுதி நீக்கம்

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் குறிப்பிட்ட ஜனதா தளம் (எஸ்) கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்து துமகூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-09 21:09 GMT

பெங்களூரு: துமகூரு மாவட்டத்தில் சிரா நகரசபை உள்ளது. அந்த நகரசபையில் 9-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வந்தவர் ரவிசங்கர். ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த அவர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்துகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். இததொடர்பாக தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா, கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ரவிசங்கர் உண்மை தகவல்களை மறைத்து தவறான தகவல்களை பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், மேலும் ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறைத்துள்ளதாகவும், அதனால் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும் அரை கிலோ தங்க நகைகள் வைத்திருப்பதாகவும், வாடகையாக ரூ.3.60 லட்சம் பெற்றதாகவும், ஆனால் அவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் அட்டையை வைத்திருப்பதகாவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விசாரணையின்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீதாஞ்சலி, கவுன்சிலர் ரவிசங்கர் பிரமாண பத்திரத்தில் உண்மை தகவல்களை மறைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிவதாகவும், அதனால் அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்