காங். செய்தி தொடர்பாளர் ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஜெய்வீர் ஷெர்ஜில் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-08-24 16:59 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஜெய்வீர் ஷெர்ஜில் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரசில் முடிவு எடுப்பவர்களின் சித்தாந்தமும், தொலைநோக்கு பார்வையும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இல்லை. முடிவுகள் எடுப்பது பொதுநலனுக்கோ, தேச நலனுக்கோ உகந்ததாக இல்லை. முகஸ்துதியில் ஈடுபடும் தனிநபர்களின் சுயநலத்துக்கு ஏற்பவும், கள நிலவரத்தை புறக்கணித்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இதை என்னால் ஏற்றுக்கொள்ளவோ, தொடர்ந்து பணியாற்றவோ முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தங்கள் பதவியிலிருந்து விலகிய நிலையில் தற்போது தேசிய செய்தி தொடர்பாளரும் விலகி உள்ளது காங்கிரஸ் கட்சியின் மேல் மட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்