அமெரிக்க ராணுவ மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

அமெரிக்க ராணுவ மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-09-27 19:07 GMT

வாஷிங்டன்,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் வரவேற்றார். இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரஸ்பர நலன், கிழக்கு ஆசிய பிரச்சினைகள், இந்திய பெருங்கடல் பிராந்திய விவகாரங்கள், உக்ரைன் போர் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

இருதரப்பு பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆய்வு செய்தனர். தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்