அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐ.டி.ஊழியர் பலி
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நொய்டா,
நொய்டாவில் ,முன்னணி ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர், பலத்த மழைக்கு நடுவில் தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
42வயதான அந்த நபர் இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் இருந்து நொய்டாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், இங்குள்ள கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக தங்கி இருந்தாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது உடனடியாகத் தெரியவில்லை என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்