நாட்டையும், ஊரையும் தூய்மையாக வைத்து கொள்ளும் தூய்மை பணியாளர்கள் தெய்வீகமானவர்கள்

நாட்டையும், வீட்டையும் தூய்மையாக வைத்து கொள்ளும் தூய்மை பணியாளர்கள் தெய்வீகமானவர்கள் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-27 19:00 GMT

சிக்கமகளூரு;

தீபாவளி பண்டிகை

சிக்கமகளூரு டவுன் பென்ஷன் மொஹல்லாவில் நேற்றுமுன்தினம் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கலந்துகொண்டு அந்த பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களான சந்திரம்மா, நரசிம்மா, கவுரம்மா ஆகியோருக்கு பாத பூைஜ செய்து காலில் விழுந்து கும்பிட்டு வணங்கினார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியதாவது;-

நாட்டையும், ஊரையும்...

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். அதேபோல நாட்டையும், ஊரையும், நம்மையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களும் ஒரு தெய்வீகமானவர்கள்.

அந்த வகையில் அவர்களுக்கு பாத பூஜை நடந்தது. தூய்மை பணியாளர்கள் இல்லையென்றால் நம் நகரம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்காது.

பாதபூஜை

வீட்டையும் மற்றும் நாட்டையும் தூய்மை பணியாளர்கள், தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த இடத்தில் அவர்களுக்கு அரசு சார்பாக தீபாவளி பண்டிகை வாழ்த்து தெரிவித்து, அவர்களது இல்லத்திற்கு சென்று பாத பூஜை செய்து வழிபட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் வேணுகோபால், நகர வளர்ச்சி தலைவர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்