இந்திய சுதந்திர தினம்: இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

இந்திய சுதந்திரத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-15 15:52 GMT

டெல்லி,

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இந்திய சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இஸ்ரேல் சார்பாக அன்புள்ள பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாடுகள் இன்னும் இணைந்து செயல்பட்டு ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.     

Tags:    

மேலும் செய்திகள்