அனைத்து மதங்களிலும் இஸ்லாம் மிகவும் பழமையான மதம்...! - மஹ்மூத் மதானி

அனைத்து மதங்களிலும் இஸ்லாம் மிகவும் பழமையான மதம் என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மஹ்மூத் மதானி கூறினார்.

Update: 2023-02-11 07:59 GMT

புதுடெல்லி

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் 34 வது பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மஹ்மூத் மதானி பேசும் போது கூறியதாவது;-

இஸ்லாம் உலகின் மிகப் பழமையான மதம். இந்தியா நமது நாடு. இந்த நாடு நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்துக்கும் எவ்வளவு சொந்தமோ, அதே அளவு இந்த நாடு மஹ்மூத்துக்கும் சொந்தமானது.

மஹ்மூத் அவர்களை விட ஒரு அங்குலம் முன்னால் இல்லை அல்லது அவர்கள் மஹ்மூதை விட ஒரு அங்குலம் முன்னால் இல்லை.

இந்த நிலம் முஸ்லீம்களின் முதல் தாயகம். இஸ்லாம் வெளியில் இருந்து வந்த மதம் என்று சொல்வது முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படையற்றது. அனைத்து மதங்களிலும் இஸ்லாம் மிகவும் பழமையான மதம். இந்தி முஸ்லீம்களுக்கு இந்தியா சிறந்த நாடு என கூறினார்.

கூட்டத்தில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டுபவர்களை குறிப்பாகத் தண்டிக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். நாட்டில் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் இஸ்லாமோபோபியா அதிகரிப்பது உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்