டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய நபர் கைது - என்ஐஏ அதிரடி

டெல்லியில் என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-07 08:16 GMT

புதுடெல்லி,

புதுடெல்லியின் பாட்லா ஹவுஸ் பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஐஎஸ்எஸ்ஐ பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த முஹ்சின் அகமது என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அகமது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் அந்த அமைப்பிற்கு நிதி திரட்டியதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைபிற்கு அமகது நிதி திரட்டி அதை சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி வாயிலாக அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய முஹ்சின் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்