கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறுகிறதா பெலகாவி சிறை?

கர்நாடகத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக பெலகாவி சிறை விளங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2023-08-01 21:58 GMT

பெங்களூரு:-

5 பயங்கரவாதிகள்

கர்நாடகத்தில் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கி வருகின்றன. கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் குண்டு வெடித்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட தயாராக இருந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக பெலகாவி சிறையில் தான் திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அதாவது பெங்களூருவில் ஹனிடிராப் வழக்கு ஒன்றில் பயங்கரவாதி ஷாரிக் கைது செய்யப்பட்டு பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் சிக்கமகளூருவை சேர்ந்த அப்சர் பாஷா என்ற பயங்கரவாதி, பெங்களூரு குண்டுவெடிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டார்.

புகலிடம்

அப்போது அவருக்கும், ஷாரிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அப்போதுதான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படவும், அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிகிறது. தற்போது அப்சர் பாஷா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாக்பூர் போலீஸ் வசம் உள்ளார்.

இதேபோல் பெலகாவி சிறையில் இருந்து தான் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜெயேஷ் பூஜாரி என்ற கைதியை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே கர்நாடகத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக பெலகாவி சிறை விளங்கு

கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்