ஐ.எஸ். அமைப்பில் ஆள் சேர்த்தலில் ஈடுபட்ட கேரள நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

ஐ.எஸ். அமைப்பில் ஆள் சேர்த்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த நபருக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-10-03 16:29 GMT



திருவனந்தபுரம்,



கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொடுவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாய்பு நிகார். இவர், ஐ.எஸ். அமைப்பில் ஆள் சேர்த்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு வாந்தூர் காவல் நிலையத்தில் புகார் பதிவானது. 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் 7 பேர் ஐ.எஸ். பகுதிகளுக்கு பயணம் செய்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்பின்பு 2018-ம் ஆண்டில் குற்றங்களின் தன்மையை கவனத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) வழக்கை உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. அவர்களில் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஐ.எஸ். அமைப்பில் ஆள் சேர்த்தலில் ஈடுபட்டதற்காக ஷாய்பு நிகாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்