வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்
வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்.
பெங்களூரு: ஞானபாரதி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படியாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் சிக்பள்ளாப்பூரை சேர்ந்த சுமா் என்கிற கப்பர் (வயது 26), பெங்களூரு உத்தரஹள்ளியை சேர்ந்த பரத் என்கிற கல்லா பரத் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். கைதான 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் திருடப்பட்ட 6 இருசக்கர வாகனம், ஒரு சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.5.95 லட்சம் ஆகும். கைதான 2 பேரும் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.