சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை பிடித்த போலீசார்

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர்.

Update: 2022-08-25 16:38 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு டவுனில் உள்ள குவெம்பு நகர் போலீசார் நேற்று காலையில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நேரு நகர் மற்றும் ரமாபாய் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவருக்கும் 23 மற்றும் 25 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து தங்கச்சங்கிலிகளை பறிப்பதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்