முதலீட்டு நடவடிக்கை: 3,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐ.பி.எம் நிறுவனம்...!
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக 3900 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் ஏற்பட உள்ள பணவீக்க அபாயத்திலிருந்து தப்பிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், கூகுள், ஸ்விக்கி, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்துள்ளது. முதலீட்டு நடவடிக்கைகளுக்காக நடப்பு காலாண்டில் 3,900 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம் ஆகும்.
இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான ஊதியங்கள் புதிய முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.