காதலருடன் காரில் நெருக்கம்; வீடியோவை காட்டி மிரட்டி, கல்லூரி மாணவி பலாத்காரம்

டெல்லியில் காதலருடன் காரில் ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி, காவலர் என கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

Update: 2023-07-13 05:48 GMT

புதுடெல்லி,

டெல்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.

அவர்கள் இருவரும் காரில் இருந்தபோது, ஆபாச வீடியோ ஒன்றை அந்த நபர் படம் பிடித்து வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து கார் புறப்பட்டு சென்று உள்ளது. அந்நபர் தனது பைக்கில் காரை பின்தொடர்ந்து சென்று உள்ளார்.

அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று உள்ளார். அதுவரை காத்திருந்த அந்த மர்ம நபர், கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து சென்று உள்ளார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு உள்ளே சென்ற அவர், படிகளில் இருந்த மாணவியை பார்த்து உள்ளார். அவரிடம் தன்னை ஒரு போலீஸ்காரர் என கூறியுள்ளார்.

இதன்பின், வீடியோவை காண்பித்து, அதனை ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். பின்பு, அந்த மாணவியை தாக்கி, படிகளிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதனை போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்ததும், தனது காதலரிடம் நடந்த விவரங்களை கூறி அழுது உள்ளார். பின்பு இருவரும் போலீசில் புகாராக கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றவாளி யாரென்று பெண்ணுக்கு தெரியவில்லை. அதனால், இந்த வழக்கை போலீசார் அதிக சிரமத்துடன் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின், அந்த மாணவி கூறிய அடையாள விவரங்கள், சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் அந்த நபரை பிடித்து உள்ளனர். அந்த நபர் பெயர் ரவி சொலான்கி என தெரிய வந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்