சூதாட்டத்தில் ரூ.1,500 இழந்த விவகாரத்தில், ஆன்லைன் நிறுவன இயக்குனர்களிடம் விசாரணைக்கு இடைக்கால தடை- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

சூதாட்டத்தில் ரூ.1,500 இழந்த விவகாரத்தில், ஆன்லைன் நிறுவன இயக்குனர்களிடம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-13 16:27 GMT

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா சுலிபெலே பகுதியில் வசித்து வருபவர் சிவருத்ரசாமி. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அந்த செயலி மூலம் ரூ.1,500 பணம் கட்டி விளையாடினார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், சிவருத்ரசாமி தன்னிடம் ரூ.1,500-ஐ ஆன்லைன் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக கூறி சுலிபெலே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் ஆன்லைன் நிறுவனம், அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் சிவம்குமார், உமேஷ் கோயல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தங்கள் மீது போலீசார் பதிவு செய்ய வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை கேட்டும் கர்நாடக ஐகோர்ட்டில் சிவம்குமார், உமேஷ் கோயல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாக பிரசன்னா முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சந்தேஷ், சிவருத்ரசாமி தனது சொந்த விருப்பத்தின்பேரில் ரூ.1,500 கட்டி ஆன்லைனில் விளையாடி தோற்று போனதாக ஆதாரம் உள்ளது என்று கூறினார். மேலும் மனுதாரர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வக்கீல் சந்தேஷ் கேட்டு கொண்டார். அப்போது மனுதாரர்களிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்