இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன: பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, தெப்பக்காடு, மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு சென்றார். பிராஜெக்ட் டைகர் என்ற திட்டம் தொடங்கியதன் 50-ம் ஆண்டு விழாவை ஒட்டி நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967-ல் இருந்து 3,167 ஆக உயர்ந்து உள்ளதாக கூறினார்.உலகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் 75 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.