இந்தியாவின் காலம் இது... வாய்ப்புகளும், வருமானமும் உயர்கிறது, வறுமை குறைகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் காலம் இது...வாய்ப்புகளும், வருமானமும் உயர்கிறது, வறுமை குறைகிறது என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-02-09 16:24 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகலாவிய தொழில் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெதர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த மாநாடு தொழில்முனைவோர்களுக்கு மகா கும்பமேளா போன்றது. இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது என சிலர் கூறுகின்றனர். இந்தியா செல்வாக்கு செலுத்தாத பகுதியே இல்லை என சிலர் கூறுகின்றனர்.

எந்த நாட்டின் வளர்ச்சி பயணத்தை பார்த்தாலும், பல நூற்றுண்டுகளுக்கு நாடு தன்னைத்தானே வலிமைபடுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக அமையும் நேரம் வரவேண்டும். இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டதை நான் பார்க்கிறேன். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரித்து வறுமை குறையும் காலம் இது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நம்மை விமர்சிப்பவர்கள் இதுவரை இல்லாத வீழ்த்தியில் உள்ளனர்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்