இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித கணிப்பு 6.9 சதவீதமாக உயர்வு உலக வங்கி அறிவிப்பு

நடப்பு நிதிஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது.

Update: 2022-12-06 18:45 GMT

புதுடெல்லி, 

நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது. அதை கடந்த அக்ேடாபர் மாதம் 6.5 சதவீதமாக குறைத்தது. இந்தநிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும் என்று உயர்த்தி கணித்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக மீண்டு எழுந்ததுதான் இதற்கு காரணம் என்று உலக வங்கி கூறியுள்ளது. இ்ந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு ஒன்று உயர்த்தி கணித்து இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்