ஆகஸ்டு மாதம் வரை இந்திய ரெயில்வேக்கு ரூ.95 ஆயிரம் கோடி வருவாய் கடந்த ஆண்டை விட 38 சதவீதம் அதிகம்

பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2022-09-11 19:54 GMT

புதுடெல்லி, 

நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.

பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.

பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்