நாட்டின் 95 சதவீத வர்த்தகம் இந்திய பெருங்கடல் பகுதியை சார்ந்துள்ளது - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.
புதுடெல்லி,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் இன்று 'பல்துறை கடல்சார் பாதுகாப்பு குழு (எம்.ஏ.எம்.எஸ்.ஜி)' கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், துணை அட்மிரல் ஜி அசோக் குமார் (ஓய்வு) தலைமை தாங்கினார். நாட்டின் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:-
"நாட்டின் கடல்சார் பாதுகாப்பு எந்திரத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஏஜென்சிகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க நாடு விழிப்புடன் இருக்க வேண்டும்.இந்து சமுத்திரம் உலகளவில் ஒரு முக்கியமான வர்த்தக பாதையாகும்.நமது கடல் எல்லைகளை பாதுகாப்பது சிக்கலானது.
இந்திய வர்த்தகத்தில் 95 சதவிகிதம் கடல் சார்ந்தது உள்ளது. 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் வழியாக இந்திய வர்த்தகம்m பயணிக்கிறது. நமது நாட்டுக்கு தேவையான ஹைட்ரோகார்பன் தேவைகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல்வழி இறக்குமதி மற்றும் கடல் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது, கடல்வழி வர்த்தகம் மற்றும் கடல் வளங்களை அதிகம் சார்ந்து இருக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.