இந்திய வரைபடம் விவகாரம்: மன்னிப்பு கோரினார் சசி தரூர்!

'யாரும் வேண்டுமென்றே இதுபோல செய்யமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை வடிவமைத்த குழுவினர் தவறு செய்துவிட்டனர்.

Update: 2022-09-30 23:45 GMT

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி எம்.பி., சசி தரூர், தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

அதில், இந்திய வரைபடம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை.இது சர்ச்சையானது. சமூக வலைதள பயனாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து திருத்தப்பட்ட வரைபடத்தை வெளியிட்ட சசி தரூர், 'யாரும் வேண்டுமென்றே இதுபோல செய்யமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை வடிவமைத்த குழுவினர் தவறு செய்துவிட்டனர். தவறு உடனடியாக திருத்தப்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என, தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்