இந்தியா வல்லரசாகும் ஆனால்..? பிரதமரின் சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்த யோகி ஆதித்யநாத்!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் இவற்றை பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும் என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

Update: 2022-08-19 12:13 GMT

லக்னோ,

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பலியா தியாக தினத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையை குறிப்பிட்டு பேசினார்.

"பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ள ஐந்து தீர்மானங்களை மனதில் கொண்டு மக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அப்போது இந்தியா வல்லரசாக மாறும். வரும் நாட்களில் இந்தியா உலகை வழிநடத்தும்" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், மாநில முதல் மந்திரி ஒருவர் பலியா தியாக விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், ஐந்து முக்கிய அம்சங்கள் - வளர்ந்த இந்தியாவின் குறிக்கோள், காலனித்துவ மனநிலையின் கடைசி தடயத்தையும் அகற்றுதல், நமது அடிப்படை, ஒற்றுமை மற்றும் கடமை உணர்வு ஆகியவற்றில் பெருமிதம் கொள்ளுதல் ஆகிய 5 தீர்மானங்களை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவற்றை நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும் என்று உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்