இந்தியா-ரஷியா கலாச்சார விழா: நட்பை விட முக்கியமானது எதுவுமில்லை - ரஷிய தூதர் நெகிழ்ச்சி!

இந்தியா-ரஷியா தூதரக உறவின் 75 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ரஷிய கலாச்சார விழா கொண்டாடப்படுகிறது.

Update: 2022-11-22 04:48 GMT

புதுடெல்லி,

இந்தியா-ரஷியா இடையேயான தூதரக உறவின் 75 ஆண்டுகளை குறிக்கும் வகையில் டெல்லியில் ரஷிய கலாச்சார விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகளுடன் ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், இந்தியாவுடனான உறவு குறித்து பேசிய டெனிஸ் அலிபோவ் கூறுகையில், "'நட்பை விட முக்கியமானது எதுவுமில்லை' என்ற பழமொழி இந்தியாவில் பிரபலமாக உள்ளது. ரஷியா-இந்தியா மூலோபாயக் கூட்டாண்மையின் நம்பிக்கை மற்றும் நட்புத் தன்மை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கொரோனா தொற்றுநோயால் நிறுத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்குகின்றன. கலாச்சார நிகழ்வுகள் மூலம் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

இது நமது நாடுகளுக்கு இடையிலான பணக்கார மற்றும் மாறுபட்ட கலாச்சார உறவுகள், வரலாற்று நட்பு, பரஸ்பர ஆர்வம் மற்றும் நம்பிக்கைக்கு மிகவும் தெளிவான உதாரணமாக இருக்கும்" என்று கூறினார்.

நட்பை விட முக்கியமானது எதுவுமில்லை' என்ற பழமொழியை குறிப்பிட்டு அவர் பேசியது அரங்கத்தில் இருந்தவர்களின் கைத்தட்டல்களை பெற்றுத்தந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்