இந்தியாவில் புதிதாக 1,326-பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-31 05:12 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 53 ஆயிரத்து 592- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,723 - ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 656- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 912- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,024- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்