ஆண்-பெண் பாலின இடைவெளி குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு 135-வது இடம்

ஆண்-பெண் பாலின இடைவெளி குறியீடு பட்டியலில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது.

Update: 2022-07-14 04:21 GMT

புதுடெல்லி,

பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண்-பெண் பாலின இடைவெளியை உலக பொருளாதார அமைப்பு ஆய்வு செய்து 15 ஆண்டுகளாக அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சா்வதேச பாலின இடைவெளி குறியீட்டை அந்த மையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 146 நாடுகள் பட்டியலில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5 இடங்கள் முன்னேறி இருந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக பாலியல் சமத்துவமின்மையில் இந்தியா மோசமான நிலையிலேயே இருப்பதாக உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாலின சமத்துவமின்மை விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியா, கத்தாா், பாகிஸ்தான், அஜா்பைஜான், சீனா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அண்டை நாடுகளான வங்கதேசம் 71, நேபாளம் 96, இலங்கை 110, பாகிஸ்தான் 145 வது இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான், சாடு ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்