அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் வலிமையை ராணுவம் பெற்றுள்ளது: மந்திரி ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா பெற்றுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Update: 2022-08-30 11:39 GMT

ஜெய்ப்பூர்,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா பெற்றுள்ளது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில்:-

கடந்த எட்டு வருடங்களாக ஆயுதப்படையினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எந்தவொரு நாட்டையும் இந்தியா தாக்கவில்லை. ஒரு இன்ச் அளவு அந்நிய நாட்டு நிலத்தையும் கூட இந்தியா கைப்பற்றவில்லை.

ஆனால், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கு எதிராக எவராவது செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

கடந்த எட்டு வருடங்களாக இந்தியா பலவீனமாக இல்லாமல் பலமாக இருக்கிறது. நமது ஆயுதப்படையினர் மூலம் கடந்த 2016இல் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மற்றும் 2019-ல் நடத்தப்பட்ட பாலகோட் விமானத் தாக்குதல் மூலம் தீவிரவாதம் குறித்த நமது நிலையை தெளிவுப்படுத்திவிட்டோம்.

இதன் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் எந்தவொரு நாட்டையும் விட குறைவாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஆயுதப்படையினர் முழு அளவில தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்