இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை ரத்து - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகள் வரும் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2024-04-19 13:14 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையே வாரத்திற்கு 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. சுமார் 5 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் 3-ந்தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவைகளை துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்