இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை 94.50 கோடி: மத்திய அரசு தகவல்

இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை 94.50 கோடியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-02-02 22:21 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்தார்.

அதில் அவர் கூறுகையில், 'இந்திய தேர்தல் கமிஷனின் ஆவணங்களின் அடிப்படையில், கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 94,50,25,694 பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி, 91.20 கோடி வாக்காளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்