உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்
உலகில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். குழந்தைகளின் தினசரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் பொது பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா அதன் அறிவியல் விஞ்ஞானிகள், டாக்டர்கள், இளைஞர்களை நம்பியது. இந்த சமயத்தில் உலகிற்கு பிரச்சினையாக இல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காண்பராக இந்தியா இருந்தது.
கொரோனாவின் எதிர்மறை தாக்கத்தில் இருந்து விடுபட்டு, உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது' என்றார்.