ராஜஸ்தானில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை

ராஜஸ்தானில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை நிகழ்த்தினர்

Update: 2022-08-13 04:01 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை நிகழ்த்தினர்.நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று ஒன்று கூடி தேசபக்தி பாடல்களை பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று ஒரு கோடி மாணவர்கள் 25 நிமிட நேரம் வந்தே மாதரம், சரே ஜஹான் சே ஆச்சா, தேசிய கீதம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள்.இது உலக சாதனையாக நேற்று பதிவாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், "லண்டனில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, மாநில அரசிடம் சான்றிதழை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "புதிய தலைமுறையினர் சகோதரத்துவம், தியாகம் ஆகிய விழுமியங்களைப் புகுத்த வேண்டும், அதுவே நாட்டின் எதிர்காலம் ஆகும்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்