உடுப்பியில் சங்கிலி பறிப்பில் வாலிபர் கைது; ரூ.3 லட்சம் தங்கநகைகள் பறிமுதல்

உடுப்பியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-29 19:00 GMT

மங்களூரு;


உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரேமா ஷெனவா. இவர் கடந்த 3-ந்தேதி அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்தார். பின்னா் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் எம்.ஜி.எம். கல்லூரி மைதானம் அருகே நடந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் பிரேமாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். அருகில் வந்த அவர் கண்இமைக்கும் நேரத்தில் பிரேமாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து பிரேமா உடுப்பி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தண்டேலி அருகே உள்ள படேல் நகர் பகுதியை சேர்ந்த மவுலாலி ஜமாதார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2021-ம் ஆண்டு கடியலி பகுதியை சேர்ந்த டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவரின் வீட்டில் தங்க நகைகளை திருடியதையும் ஒப்பு கொண்டார்.

இவர் மீது தண்டேலி, பாகல்கோட்டை, தார்வார் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ைள, திருட்டு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 63 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்