ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-04-10 21:02 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்