பிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் அதிரடி கைது
டெல்லியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி,
டெல்லியில் போலி பிறந்தநாள் விழா நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதிநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டான பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.