கடந்த 50 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படுகொலைகள் அரங்கேறின

தட்சிண கன்னடாவில், கடந்த 50 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படுகொலைகள் அரங்கேறி உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.

Update: 2022-08-13 15:22 GMT

மங்களூரு;


கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடாவில் அண்மைக்காலமாக படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல், முல்கி, பஜ்பே, மங்களூரு டவுன், உல்லால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கொலை சம்பவங்கள் தலை தூக்கி வருகின்றன. கடந்த 1968-ம் ஆண்டு முதல் நடப்பு 2022-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் தட்சிண கன்னடாவில் 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு எந்த கடுமையான தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்த கொலை சம்பவங்களில் கோஷ்டி மோதல் முக்கிய காரணமாக உள்ளது. அதனை தொடர்ந்து மாடு கடத்தல், பெண்கள் விவகாரம், சமூக பிரச்சினைகள் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோன்ற கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களை விசாரிக்க விரைவு விசாரணை கோர்ட்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்