முதல்-மந்திரி விவகாரம்; கட்சி நலன் கருதி மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டேன் - டி.கே.சிவக்குமார் பேட்டி

கட்சி நலன் கருதி மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டேன் என்று டி.கே.சிவக்குமார் பேட்டி.

Update: 2023-05-18 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்திருப்பதாக காங்கிரஸ் மேலிடம் நேற்று அறிவித்தது. இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ேக.சி.வேணுகோபால் வீட்டுக்கு சிற்றுண்டி சாப்பிட வந்த போது டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

"நாங்கள் மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதை நிறைவேற்ற வேண்டியுள்ளது. கட்சியின் நலன் கருதி கட்சி மேலிடத்தின் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். காலமே பதில் சொல்லும். கர்நாடகத்தின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதே எங்களின் முதல் முன்னுரிமை".

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்