தொழில்அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் நகை-பணம் திருட்டு

தொழில்அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் நகை-பணம் திருட்டு போயுள்ளது.

Update: 2022-08-10 17:07 GMT

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அமரேஷ் ரெட்டி, தொழில்அதிபர். இவர், சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு உறவினருக்கு நடந்த திருமண விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் புறப்பட்டு சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மா்மநபர்கள், அமரேஷ் ரெட்டியின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் பொருட்களை மா்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்