சிவமொக்காவில் கார் கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
சிவமொக்காவில் கார் கதவை உடைத்து ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
சிவமொக்கா
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று முன்தினம் காந்தி சர்க்கிள் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை எடுத்து தனது காரில் வைத்திருந்தார். பின்னர் கார் கதவை பூட்டிவிட்டு, மீண்டும் வங்கிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து வெளியே வந்து கார் கதவை திறந்து பார்த்தார்.
அப்போது காரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மாயமாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவராஜ் உடனே தீர்த்தஹள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மர்ம நபர்கள் காரின் கதவை உடைத்து, ரூ.1 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.