சிகாரிப்புராவில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சிகாரிப்புரா தாலுகாவில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா மாசூரை சேர்ந்தவர் அண்ணப்பா (வயது26). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அண்ணப்பாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் பெற்றோர் அண்ணப்பாவுக்கு பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், அண்ணப்பாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார் திடீரென அண்ணப்பா நடவடிக்கை சரி இல்லை என்று திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் அண்ணப்பா மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். ேமலும் அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கீழே கிடந்தார். அவரை வீ்ட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிகாரிப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.