உப்பள்ளியில் சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் கைது

உப்பள்ளியில் சிறுவன் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 5 ரூபாய் கொடுக்க மறுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2023-04-03 06:45 GMT

உப்பள்ளி-

உப்பள்ளியில் சிறுவன் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 5 ரூபாய் கொடுக்க மறுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

சிறுவன் கொலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பெண்டிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட சாய்நகரை சேர்ந்தவர் உசேன்சாப். இவரது மகன் நசீம் (வயது 8). இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நசீம், பெண்டிகேரியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்டிகேரி அருகே தொட்டமணி காலனி பகுதியில் நசீம் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் சிறுவனை கொலை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்னர். விசாரணையில் அவர், உப்பள்ளி செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த ரவி பெல்லாரி (வயது 36) என்பது தெரியவந்தது. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ரவியை போலீசார் ைது செய்தனர். மேலும் அவரும் சிறுவனை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், ரவி சரியாக வேலைக்கு செல்லாமல் அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நசீம் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அவனிடம் பணம் இருப்பதை அறிந்து ரவி, நசீமிடம் சென்று ரூ.5 கேட்டுள்ளார். ஆனால் நசீம் 5 ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவி, நசீமின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் மயங்கி விழுந்து அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பயந்துபோன ரவி, நசீமின் உடலை தொட்டமணி காலனியில் உள்ள புதரில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்